பெறுபவர்களை விட கொடுப்பவர்களே பாக்கியவான்கள்-சுவாமி விவேகானந்தா

பல கோடி நன்மைகள் வழங்கும் அன்னதானத்தின் மகிமை


தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால்தான் கிருஷ்ணபகவானும் கீதையில், “எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச்சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும் வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக்கொள்ள மாட்டார் என்கிறார்".


அன்னதானத்தில்தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இதுபோன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறவர்கள், அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அன்னம் போடுகிற போதுதான் போதும் என்ற திருப்தி ஏற்படும்.


ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான் பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் என்கிற உயரிய தானம்.


அன்னதானத்தால் ப்ராணனையும், ப்ராணனால் பலத்தையும், பலத்தால் தவத்தையும், தவத்தால் ச்ரத்தையையும், ச்ரத்தையால் புத்தியையும், புத்தியால் மனத்தையும், மனத்தால் சாந்தியையும், சாந்தியால் சித்தத்தையும், சித்தத்தால் நினைவையும், நினைவால் ஸ்திதப்ரக்ஞையையும், ஸ்திதப்ரக்ஞையால் விஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னதானம் செய்வது இவையனைத்தையும் தருவதற்கு சமமாகும்.அன்னபூர்ணே ஸதாபூர்ணே ஸங்கர ப்ராணவல்லபே

ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பு௬ம் தேஹி ச பார்வதீகர்ணன் வாழ்ந்த காலத்தில் தன்னுயிர் காக்கும் கவச குண்டலங்கள் உட்பட தான் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் தானம் கொடுத்து தனத்திற்கே பெயர் பெற்றவன். அவன் இறந்து சொர்க்கம் சென்றபொழுது, கர்ணனுக்கு அங்கு அடங்காப்பசி ஏற்பட்டது. அதற்கான காரணம் குறித்து சொர்க்கலோகத்தின் தலைவனிடம் கேட்டான். அதற்கு சொர்க்கலோகத்தின் தலைவனோ, கர்ணா நீ பூலோகத்தில் வாழ்ந்த காலத்தில் பொன்னும், பொருளும் மனியும் ஏன் உன்னுயிரும் தானமாக கொடுத்து புகழ் பெற்றவன். ஆனால் வாழ்நாளில் யாருக்கும் நீ அன்னதானம் செய்யவில்லை, தனத்திற்கெல்லாம் தலையாய தானமான அன்னதானம் செய்யாததால் தான் உனக்கு இந்த அடங்காப்பசி உண்டாயிருக்கிறது என்றார்.


இந்த புண்ணிய பூமியில் ஆதரவற்றோருக்கு அன்னமளிப்பவன் மாபெரும் செல்வந்தராக வாழ்வான். தானம் செய்வதற்கு பணம் முக்கியமே அல்ல. நல்ல மனம்தான் வேண்டும். சிலர் தானம் செய்வது எள்முனை அளவு கூட வெளியில் தெரியாது. மன நிறைவுக்காக ஏழை-- எளியவர்களை, ஆதரவற்றோர்களை தேடி, தேடி போய் உதவி செய்து கொண்டே இருப்பார்கள்.


முதியோர் இல்லங்களில் வாழ்பவர்கள், அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள், ஏழைகள் இவர்களுக்கெல்லாம் அன்னதானம் செய்தால் அவர்கள் பெறும் மகிழ்ச்சியானது நமக்கு மகிழ்ச்சியையும், புண்ணியத்தையும் தரும்.


ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்று அன்னதானம் செய்து பாருங்கள், அவர்கள் முகம் கோடி சூரியனை கண்டது போல பிரகாசிக்கும். அந்த மகிழ்ச்சி தரும் புண்ணியத்துக்கும், திருப்திக்கும் அளவே இல்லை.


எனவே அளவற்ற புண்ணியமும், ஆனந்தமும் தரும் அன்னதானம் செய்து நன்மையடையுங்கள்.


சிவமயம்

கலி (4984) சாலிவாகனம் (1805) சுபானுவில் ஆவணி மாதம் 18ம் தேதி ஆதித்ய மற்றும் பாண்டி
நாட்டைச் சேர்ந்த நாட்டுக் கோட்டைச் செட்டி வைசிய நகரத்தார், ஸ்ரீ அயோத்தியா புரியில் ஸ்ரீ ராமபிரான் பிரதிஷ்டையும் அன்னதானச் சத்திரம் ஸ்தாபனம் செய்யப் பெற்று நடந்து வருகிறது.

சுப மஸ்து - இங்கிலீஸ் 1883 செப்டம்பர் மாதம் 2ம் தேதி


ஒரு நூற்றாண்டு கடந்து அயோத்தி சத்திர வாசலில் இருக்கும் இந்தச் கல்வெட்டு காலம் காலமாக அன்னதானத்தின் சாட்சியாக நிற்கிறது.