பெறுபவர்களை விட கொடுப்பவர்களே பாக்கியவான்கள்-சுவாமி விவேகானந்தா

முதியோர் நல மருத்துவ மையம் அமைத்தல்


ஆதரவற்ற அன்னையருக்கு முதியோர் நல மருத்துவ மையம் அமைக்க
நீங்கள் அளிக்கும் நிதி, தானமல்ல பரிசு அதிலும் உயிருள்ள பரிசு


"தாயின் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை" என்றெல்லாம் பெற்றோருக்கு புகழாரம் சூட்டும் நம் நாட்டில் தான் பெற்றோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் அவலமும் அரங்கேறுகிறது.


ஓடி ஆடி திரிந்த போது ஒத்தாசையாய் இருந்த பெற்றோர்கள்... தள்ளாமையினால் தடுமாறும்போடு ஒதுக்கப்படுகின்றனர். இளைய தலைமுறையினரின் புறக்கணிப்பு ஒருபுறம், தள்ளாமை மறுபுறம் என தடுமாறித்தான் போகின்றனர்.


முதுமையில், உடல் தளர்ச்சியினாலும், சத்தில்லாத உணவினாலும் நோய்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். முதுமை என்பது பல நோய்களின் மேய்ச்சல் காடாகத்தான் இருக்கிறது. முதியவர்களை அதிகம் பாதிக்கும் நோய் எது என்பதற்கு சரியான பதிலைக் கூற இயலாது. இது அவர்களுடைய மரபு நிலை, பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலையைப் பொறுத்தே ஆகும்


முதியோர் பராமரிப்பு சம்பந்தமாக பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வும், புரிந்துணர்வும் இல்லாமலிருப்பது வேதனையான விஷயம்.


முதியோர் உடல் ரீதியாக நோய்வாய்ப்படும்பொழுது அவர்களை பராமரிக்க பயிற்சிபெற்ற மருத்துவர்கள் / பராமரிப்பாளர்கள் பற்றாக்குறையும் ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து நிற்கிறது.


அரசு மருத்துவமனைகளில் முதியோருக்கென்று தனிப்பிரிவுகள் இல்லாதிருப்பது வேதனைக்குரிய விஷயம். மேலும், முதியோர்கள் மருத்துவமனைகளில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையே நிலவுகிறது. அதனைப்போக்கி முதியோருக்கென்று ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் முதியோர் நல மருத்துவத்திற்க்கான தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும்.


எனேவேதான், எங்களது இல்ல வயதான அன்னையர்களின் உடல்நிலை, மருத்துவ தேவைகளை கருத்தில்கொண்டும், வயதான அன்னையர் நோயின்றி வாழவும், அவர்களுக்கு தேவையான சிகிச்சையை உடனடியாக அவர்களுக்கு அளிக்கவும் எங்களது இல்லத்திலேயே ஒரு முதியோர் நல மருத்துவ மையம் உடனடியாக அமைக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.


முதுமையில் வரும் நோய்களுக்கு காலம் தாழ்த்தாமல் உடனடியாக தக்க சிகிச்சை அளிக்கவேண்டும் என்பதால், ஆதரவற்ற, நோயுற்ற மற்றும் வயதான அன்னையருக்காக அமைக்கப்படும் இந்த முதியோர் நல மருத்துவ மையத்திற்கு தங்களால் இயன்ற நன்கொடையை அளித்து ஆதரவற்ற அன்னையரின் முதுமையை வளமாக்கி அவர்கள் தங்களின் முதுமையை ஆனந்தமாய் அனுபவிக்க உதவி செய்திட அன்புடன் வேண்டுகிறோம்


குடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட ஆதரவற்ற அன்னையருக்காக கட்டப்படும் இந்த முதியோர் நல மருத்துவ மையம் அமைக்க ரூ. 5,000/- அனுப்புவோர்களுக்கு ஒரிஜினல்குபேரஸ்படிகலிங்கம் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.