பெறுபவர்களை விட கொடுப்பவர்களே பாக்கியவான்கள்-சுவாமி விவேகானந்தா

செயல்பாடுகள்


 • தியானத்தின் மூலம் வயதான அன்னையரின் மனச்சோர்வை அகற்றவும், மன அமைதி பெறவும் அவர்களுக்கு எதையும் எதிர்நோக்கும் பாங்கு கிடைக்கவும் வழிவகை செய்யப்படுகிறது.

 • முதுமையிலும் ஆரோக்கியமாக வாழ்வதற்கான அனைத்து வழிமுறைகளும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது.

 • மனசுமையால் வாடும் அன்னையரின் மன அமைதிக்கு எங்களது இல்லத்தில் கீதை உபன்யாசம் நடத்தப்படுகிறது.

 • அன்னையர் தமது உடல் நலம், மனநலம் பேண பிராணாயாமம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

 • அன்னையரின் நினைவாற்றலை அதிகரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

 • அன்னையரின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு இங்கு சுத்தமான பசும்பால் மட்டுமே வழங்கப்படுகிறது.

 • வாரத்திற்கு ஒரு முறை இல்லத்தில் உள்ள வயதான அன்னையரின் உடல்நிலை பரிசோதனை செய்யப்படுகிறது.

 • நோயுற்ற பல அன்னையருக்கு மூட்டுவலி, பக்கவாதம் ஆகியவற்றால் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இவர்களுக்கு உரிய நேரத்தில் தக்க உடற்பயிற்சி அளித்து, அவர்கள் ஓரளவு பழைய நிலைக்கு திரும்ப உதவிபுரிகின்றோம்.

 • வரும்முன் காக்க காலமுறைப்படி மருத்துவ பரிசோதனையும், தடுப்பு ஊசி முகாமும் நடத்தப்படுகிறது.

 • நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட அன்னையருக்கென்று சிறப்பு கவனம் செலுத்தி உணவும், சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

 • அவ்வை ஹோம் சார்பாக சிறப்பு மருத்துவ முகாம்கள் குன்றத்தூரைச் சுற்றியுள்ள முதியோர்களுக்காக நடத்தப்படுகிறது.

 • ஒவ்வொரு ஆண்டும் அவ்வை ஹோம் சார்பாக முதியோர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

 • விசேஷ நாட்களில் அவ்வை ஹோம் சார்பாக ஆதரவற்றோருக்கு நமது இல்லத்தில் சிறப்பு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 • அவ்வை ஹோம் சார்பாக முதியோர்களுக்கான சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது.