பெறுபவர்களை விட கொடுப்பவர்களே பாக்கியவான்கள்-சுவாமி விவேகானந்தா

ஸ்ரீ காயத்ரி ஹோமம்


ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று ஸ்ரீ அவ்வை ஹோமில் கலைமகள் அருளையும், திருமகள் அருளையும் ஒரு சேர வழங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் சகல தேவதா ஸ்ரீ காயத்ரி ஹோமம் மற்றும் சிறப்பு ஐஸ்வர்ய கலச பூஜையும் நடத்தப்படும். இதில் தாங்கள் பங்கு பெற சங்கல்ப கட்டணம் ரூ. 300/- மட்டுமே.


ஸ்ரீ காயத்ரி மூல மந்திரம் பாவங்களை அழித்து, புண்ணியத்தை வளர்ப்பதற்கு தோன்றிய மந்திரமாகவும். ஸ்ரீ காயத்ரி வழிபாடு நமக்கு நீண்ட ஆயுள், நிகரில்லா செல்வம், புகழ், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்கவும், திறமைகேற்ற வேலை, மனதில் மகிழ்ச்சி, சகல காரிய வெற்றி, நிலம்/வீடு வாங்குவதற்கும், குடும்ப ஒற்றுமை, திருமாங்கல்யம்/மழலை பாக்கியம் மற்றும் நோயற்ற வாழ்வை அளிக்கிறது. குடும்ப பிரச்சனைகள், திருமணத்தடை, பண பிரச்சனைகள், கடன் தொல்லைகள் மற்றும் வியாபார தடைகளை போக்கி சர்வ மங்கலமும், லக்ஷ்மி கடாட்சமும் கிடைக்க செய்கிறது. தாங்கள் பிரார்த்தனைகளுக்கு ஏற்ப தனி தனியாக சங்கல்பம் செய்து, ஹோம பிரசாதத்துடன் ஸ்ரீ காயத்ரி யந்திரம், ஸ்ரீ காயத்ரி மகாமந்திரம், மஹாமிருத்யுஞ்சய மந்திரம் மற்றும் ஜெப மாலை அடங்கிய சி.டி.யும் ஸ்ரீ காயத்ரி ராக்சை மற்றும் ஹோம பஸ்பமும் அனுப்பி வைக்கப்படும்.


வீட்டில் காயத்ரி ஹோமம் செய்ய விரும்புவோருக்கு, எங்களது இல்லத்து பெண் முதியவர்கள் நேரடியாக சென்று அவர்களின் வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும் சகல தேவதா ஸ்ரீ காயத்ரி ஹோமத்தை நடத்தி தருவார்கள்.